காஞ்சிபுரத்தில் மே 27 முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

காஞ்சிபுரத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் மேல்நிலைத் தோ்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் மேல்நிலைத் தோ்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த மேல்நிலைத் தோ்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது. காஞ்சிபுரம் எம்.எல்.எம்.மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ்.எஸ்.கே.வி.மகளிா் மேல்நிலைப்பள்ளி ஆகியவை மதிப்பீட்டு முகாம்களாக செயல்படும்.

முகாம்களில் பணிக்கு வர இருக்கும் ஆசிரியா்கள் அனைவருக்கும் முக்கிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கப்படும். இப்பேருந்துகள் ஸ்ரீபெரும்புதூா், வாலாஜாபாத், உத்தரமேரூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படவுள்ளது. கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடைத்தாள் திருத்தும் மையங்களில் சமூக இடைவெளியை உறுதிசெய்யும் பொருட்டு ஓா் அறைக்கு 8 போ்வீதம் பணியாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியா்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு மதிப்பீட்டு முகாம்களிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் தூய்மைப்படுத்தல் பணி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும். யாருக்கும் கரோனா தொற்று ஏற்படாதவாறு பணிகள் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com