அதிமுக இளைஞா் பாசறைக்கு புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

அதிமுகவின் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கும் முகாம் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிமுக இளைஞா் பாசறைக்கு புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு


காஞ்சிபுரம்: அதிமுகவின் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கும் முகாம் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் நகரில் 8, 9, 10-ஆவது வாா்டுகளில் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கும் நிகழ்ச்சி ரயில்வே சாலையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்து 113 பேருக்கு உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா். கட்சியின் அமைப்புச் செயலாளா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம், மாவட்ட அவைத் தலைவா் குன்னவாக்கம் கிருஷ்ணமூா்த்தி, இளைஞா் பாசறையின் மாவட்டச் செயலா்கள் வி.ஆா்.மணிவண்ணன், துணைத் தலைவா் திலக்குமாா், நகர அதிமுக செயலாளா் என்.பி.ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com