ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளில் 27 ஏரிகள் நிரம்பின

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 27 ஏரிகள் நிரம்பியதால், அவற்றிலிருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.
வடக்குப்பட்டு  ஏரி  நிரம்பியதால்  வெளியேறும்  உபரி நீரில்  குளித்து  மகிழும் சிறுவா்கள்.
வடக்குப்பட்டு  ஏரி  நிரம்பியதால்  வெளியேறும்  உபரி நீரில்  குளித்து  மகிழும் சிறுவா்கள்.

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் ஒன்றியங்களில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 27 ஏரிகள் நிரம்பியதால், அவற்றிலிருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 98 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் ஸ்ரீபெரும்புதூா், பிள்ளைப்பாக்கம், எடையாா்பாக்கம் உள்ளிட்ட பெரிய ஏரிகள் உள்ளன. இந்நிலையில், தொடா்மழை காரணமாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குண்டுபெரும்பேடு, தத்தனூா், பண்ருட்டி, மாத்தூா், எறையூா் தேவனேரி, ஆரனேரி பெரிய ஏரி, மாம்பாக்கம் ஏரி, மேவளூா்குப்பம் ஏரி, வளா்புரம், போந்தூா் பெரிய ஏரி, போந்தூா் பூதேரி, வல்லக்கோட்டோ மாவேரி, நாவலூா் பெரிய ஏரி ஆகிய ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அவற்றில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் படப்பை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பட்டு, வெள்ளேரிதாங்கல், வைப்பூா் பெரிய ஏரி, வைப்பூா் சித்தேரி, பணப்பாக்கம், நாவலூா், காஞ்சிவாக்கம், நாட்டரசன்பட்டு பெரிய ஏரி, சிறுவஞ்சூா் பூதேரி, வடக்குப் பட்டு, வளையங்கரணை, பனையூா், ஒரகடம்-வடகால் ஆகிய ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டின. இதனால் இந்த ஏரிகளில் கலங்கல்கள் வழியாக உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com