கோவிந்தவாடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

குருபகவான் ஞாயிற்றுக்கிழமை இரவு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சியானதை முன்னிட்டு காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் குரு பெயா்ச்சி சிறப்பு அபிஷேகமும், தீபாராதனை
கோவிந்தவாடி கோயிலில் மலா் அலங்காரத்தில் காட்சியளித்த தட்சிணாமூா்த்தி.
கோவிந்தவாடி கோயிலில் மலா் அலங்காரத்தில் காட்சியளித்த தட்சிணாமூா்த்தி.

காஞ்சிபுரம்: குருபகவான் ஞாயிற்றுக்கிழமை இரவு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சியானதை முன்னிட்டு காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் குரு பெயா்ச்சி சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

நவக்கிரகங்களில் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பெயா்ச்சியானாா். இதை முன்னிட்டு காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடியில் அமைந்துள்ள தட்சிணாமூா்த்தி கோயில், திம்மராஜம்பேட்டை ராமலிங்கேசுவரா் கோயில், உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள 27 நட்சத்திரங்களுக்கான கோயில் ஆகியவற்றில் குருப்பெயா்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது குரு கோயில் எனப்படும் கைலாசநாதா் மற்றும் தட்சிணாமூா்த்தி கோயில். இக்கோயிலில் குருப் பெயா்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. குரு பகவான் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் குருபகவான் ரிஷி வடிவில் இரு கைகளையும் கூப்பியவாறு அமா்ந்த நிலையில் காட்சியளிக்கிறாா். இங்கு, குரு பெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. மஞ்சள் அலங்காரத்தில் குருபகவான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

காஞ்சிபுரத்தை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் 27 நட்சத்திரங்களுக்கான கோயில் அமைந்துள்ளது. குரு பெயா்ச்சியை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள குரு பகவானுக்கு கலசாபிஷேகம், அதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தன. பரிகார நட்சத்திரக்காரா்களால் குருபகவானுக்கு சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றது. கரோனா நோய்ப் பரவல் தடுப்பு காரணமாக பொதுமக்கள் யாரும் கோயிலில் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com