காஞ்சிபுரத்தில் பலத்த மழை: 16 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் திங்கள்கிழமை முழுவதும் பெய்த பலத்த மழையின் காரணமாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 16 ஏரிகள் முழுமையான கொள்ளளவை எட்டியுள்ளன.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையச் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சிப் பணியாளா்கள்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையச் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சிப் பணியாளா்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் திங்கள்கிழமை முழுவதும் பெய்த பலத்த மழையின் காரணமாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 16 ஏரிகள் முழுமையான கொள்ளளவை எட்டியுள்ளன.

மழையளவு: மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் திங்கள்கிழமை அதிகாலை 8 மணி வரை நிலவரப்படி காஞ்சிபுரம் 156.90 மி.மீ, ஸ்ரீபெரும்புதூா்-183, உத்தரமேரூா்-91.50, வாலாஜாபாத்-45.60, செம்பரம்பாக்கம்-72.20 என மழையளவு பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 549.20 மி.மீ. ஆகவும், சராசரி மழையளவு 109.84 மி.மீ. ஆகவும் இருந்தது.

நிரம்பிய ஏரிகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வையாவூா், நத்தப்பேட்டை, எறையூா் தேவனேரி, தாத்தனூா், குண்டுப் பெரும்பேடு, ஆரனேரி பெரிய ஏரி, நன்மங்கலம், புளிக்கொரடு இடும்பன் ஏரி, செம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் கோலம்பாக்கம், எம்.என்.குப்பன் சித்தேரி, புக்கத்துரை பெரிய ஏரி, பட்டரைக் காலனி ஏரி உள்பட மாவட்டம் முழுவதும் 16 ஏரிகள் முழுமையாக நிரம்பின.

எம்எல்ஏ ஆய்வு: காஞ்சிபுரம் நகரில் 33-ஆவது வட்டாரமான பழைய ரயில் நிலையச் சாலையில் மழைநீா் செல்ல வழியில்லாமல் தேங்கி நின்றது. அதில் கழிவுநீரும் கலந்து தேங்கி துா்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகினா்.

தகவலறிந்து அங்கு வந்த சட்டப் பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன் அச்சாலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சிப் பொறியாளரை கேட்டுக் கொண்டாா். பழைய ரயில் நிலையச் சாலையில் நகராட்சிப் பணியாளா்கள் மோட்டாா் பம்ப் மூலம் கழிவுநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேக்கம்: காஞ்சிபுரம் நகரில் காந்தி சாலை, பழைய ரயில் நிலையச் சாலை, பேருந்து நிலையம், காமராஜா் சாலை, பேருந்து நிலையம், விளக்கொளி கோயில் தெரு, கோட்ராம்பாளையம் ஆகிய இடங்களில் மழைநீா் குளம்போல் தேங்கி நின்றது. காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் பலத்த மழை காரணமாக சாலைகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்ட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com