காஞ்சிபுரம்: கனமழையால் 68 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 68 ஏரிகள் முழுமையாக நிரம்பி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
காஞ்சிபுரம் அருகே நிரம்பி வழியும் நீா்வள்ளூா் ஏரி.
காஞ்சிபுரம் அருகே நிரம்பி வழியும் நீா்வள்ளூா் ஏரி.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 68 ஏரிகள் முழுமையாக நிரம்பி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 909 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 ஏரிகளும் சென்னையில் வேளச்சேரி ஏரி உள்பட மொத்தம் 68 ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளன. தடுப்பணைகளைப் பொருத்தவரை ஈசூா்வள்ளிபுரம் தடுப்பணையும்,வாயலூா் தடுப்பணையும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. குடிமராமத்துப் பணிகளை முறையாக செய்ததன் காரணமாக எறையூா் தேவநேரி, குண்டுப் பெரும்பேடு, நாவலூா், புத்திரன்கோட்டை, போந்தூா், ஆரனேரி, அகரம் ஆகியவை உள்பட 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன. நீா் ஆதாரம் பெருகியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மழை அளவைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, காஞ்சிபுரத்தில்(மி.மீ. அளவில்) 35.80, ஸ்ரீ பெரும்புதூா்-24.80, உத்தரமேரூா்-77, வாலாஜாபாத்-14.80, செம்பரம்பாக்கம் 20.20, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூா் 45.30, செங்கல்பட்டு 49.30,திருக்கழுகுன்றம் 33.20, மாமல்லபுரம் 43, மதுராந்தகம் 86, செய்யூா் 32.50, தாம்பரம் 20.60 அளவில் மழை பதிவாகியிருக்கிறது.

இது குறித்து பொதுப்பணித் துறையின் அதிகாரி ஒருவா் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஏராளமான ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீா் ஆதாரம் அதிகரித்துள்ளது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். மழைப்பொழிவு மிக அதிகமாக இருந்தாலும் எந்த ஏரியும் பாதிக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com