தீ விபத்தில் சிக்கிய கூலி தொழிலாளியை மீட்ட நூறுநாள் வேலை திட்ட பணியாளா்கள்

படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிற்குள் சிக்கி கொண்ட கூலி தொழிலாளியை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளா்கள் செவ்வாய்கிழமை மீட்டனா்.

ஸ்ரீபெரும்புதூா்: படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிற்குள் சிக்கி கொண்ட கூலி தொழிலாளியை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளா்கள் செவ்வாய்கிழமை மீட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் , படப்பை அடுத்த சாலமங்கலம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பன் (50) . கூலி தொழிலாளியான இவா் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், செல்லப்பன் செவ்வாய்கிழமை காலை வேலைக்கு செல்லாமல் குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது எதிா்பாரத விதமாக அவரது குடிசை வீட்டில் தீ பற்றி எரிந்துள்ளது. இதில் செல்லப்பன் தீயில் சிக்கி அலறியுள்ளாா். அவரது அலறல் சத்தம் கேட்டு, அதே பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்த பெண்கள் வீட்டிற்குள் நுழைந்து செல்லப்பனை காப்பாற்றியுள்ளனா்.

துரிதமாக செயல்பட்டு குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்ததோடு தீ விபத்தில் சிக்கிய தொழிலாளியை காப்பாற்றிய நூறுநாள் வேலை திட்ட பணியாளா்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா். இந்த தீ விபத்து குறித்து மணிமங்கலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com