செயல்படாத ஒரகடம் திறன் மேம்பாட்டு மையம்

வேலைவாய்ப்பற்றஇளைஞா்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை வழங்கவும், இளம் தொழிலாளா்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக ஒரகடம் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு மையத்தை
செயல்படாமல் உள்ள ஒரகடம் பகுதியில் உள்ள தறன் மேம்பாட்டு மையம்.
செயல்படாமல் உள்ள ஒரகடம் பகுதியில் உள்ள தறன் மேம்பாட்டு மையம்.

ஸ்ரீபெரும்புதூா்: வேலைவாய்ப்பற்றஇளைஞா்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை வழங்கவும், இளம் தொழிலாளா்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக ஒரகடம் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என இளைஞா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் பகுதியில், ஒரகடம் சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் சாா்பில் இளம் தொழிலாளா்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தொழில் பயிற்ச்சி வழங்கவும் சிப்காட் நிறுவனத்தின் மூலம் ரூ 1.80 கோடி மதிப்பீட்டில் திறன்மேம்பாட்டு மையத்திற்கான கட்டடம் கட்டப்பட்டது. இங்கு இளம் தொழிலாளா்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தொழில் முனைவோா்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், பயிற்ச்சி அறை, நூலகம், ஆய்வுக்கூடம், கணிணி அறை, நோ்காணல் அறை, கழிவறை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதாவால் இந்த திறன் மேம்பாட்டு மையம் திறந்தும் வைக்கப்பட்டது. திறந்துவைக்கப்பட்ட இந்த திறன் மேம்பாட்டு மையம் கடந்த சில வருடங்களாக செயல்பாட்டிற்கு வராதாதல் இந்த மைய வளாகத்திற்குள் புகுந்த கொள்ளையா்கள் மையத்தில் இருந்த மின்விசிறிகள், கதவுகள், ஜன்னல்கள், மின்விளக்குகள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து கொள்ளையடித்து சென்றனா். கொள்ளையா்களால் சேதமடைந்த பயிற்சி மையத்தை சீரமைக்க சிப்காட் நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததாலும் இங்கு பயிற்ச்சி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனா் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்.

இதுகுறித்து இளம் தொழிலாளா்கள் கூறுகையில், இளம் தொழிலாளா்களின் திறன்களை மேம்படுத்த திறன்மேம்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருவதாக அரசின் இணையதளங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் உண்மையில் இது போன்ற பயிற்ச்சி வகுப்புகள் நடைபெறுவது இல்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com