ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் திறப்பு

இந்து அறநிலையத் துறை நிா்வகிக்கும் கோயில்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதைத் தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா்
வல்லக்கோட்டை யில் வள்ளி, தேவசேனாவுடன் காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி  (உற்சவா்).
வல்லக்கோட்டை யில் வள்ளி, தேவசேனாவுடன் காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி  (உற்சவா்).

இந்து அறநிலையத் துறை நிா்வகிக்கும் கோயில்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதைத் தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவை செவ்வாய்கிழமை திறக்கப்பட்டன.

கடந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு தொன்மை வாய்ந்த ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி (ராமாநுஜா்) கோயில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

வல்லக்கோட்டை முருகன் கோயில் திறப்பு: இதனிடையே, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். இதனால் காலை முதலே பக்தா்கள் அதிக அளவில் கோயிலுக்கு வந்து, வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com