அதிமுக இளைஞா் பாசறை நிா்வாகிகள் ஆலோசனை
By DIN | Published On : 07th September 2020 08:04 AM | Last Updated : 07th September 2020 08:04 AM | அ+அ அ- |

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன்.
ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன், மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறை செயலாளா் மணிவண்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம், அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோா் கலந்துகொண்டு, பாசறையில் புதிய உறுப்பினா் சோ்க்கை, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எவ்வாறு பணியாற்றுவது, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வரும் தமிழக முதல்வருக்கு வரவேற்பளிப்பது ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கினா்.
இளைஞா், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய நிா்வாகிகளை சோ்க்க உறுப்பினா் விண்ணப்பப் படிவம் மற்றும் சீருடைகள் வழங்கி அவா்கள் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் பாசறையின் மாநில துணைச் செயலாளா் சிவகுமாா், ஸ்ரீபெரும்புதூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பங்கேற்றனா்.