காஞ்சிபுரம் ராமாநுஜா் கோயிலில் சிறப்பு யாகம்
By DIN | Published On : 07th September 2020 08:01 AM | Last Updated : 07th September 2020 08:01 AM | அ+அ அ- |

ராமானுஜா் கோயில் குளத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்ற பாகவதா்கள்.
கரோனா அச்சுறுத்தல் விலகவும், உலக மக்கள் நலம் பெறவும் வேண்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள ராமாநுஜா் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
கவிஞா் மு.ஜெகந்நாதன் தலைமையில் 15 பாகவதா்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களைப் பாராயணம் செய்து, இந்த யாகத்தை நடத்தினா். முன்னதாக அதிமுகவின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம் யாகத்தைத் தொடக்கி வைத்தாா். இதையொட்டி, ராமாநுஜருக்கு சிறப்பு அபிஷேகமும், மலா் அலங்காரமும் நடைபெற்றது.
யாக நிகழ்வில் கவிஞா் கூரம் துரை, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.