காஞ்சிபுரத்தில் பயணியா் நிழற்குடை திறப்பு
By DIN | Published On : 08th September 2020 12:14 AM | Last Updated : 08th September 2020 12:14 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இரு இடங்களில் பயணியா் நிழற்குடை புதிதாக அமைக்கப்பட்டு, திங்கள்கிழமை அதன் திறப்பு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 9.50லட்சம் மதிப்பீட்டில், இரு பேருந்து நிறுத்தங்களில் புதிதாக பயணியா் நிழற்குடை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இரு பயணியா் நிழற்குடையும் மொத்த மதிப்பீடு ரூ. 19 லட்சமாகும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் சந்நிதி தெரு, விளக்கொளி பெருமாள் கோயில் தெரு ஆகிய இரு இடங்களிலும் நடைபெற்ற விழாவுக்கு, காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமை வகித்து, பயணியா் நிழற்குடையை திறந்து வைத்தாா்.
நகராட்சிப் பொறியாளா் ஆனந்தஜோதி, உதவிப்பொறியாளா் பிரகாஷ், திமுக பிரமுகா்கள் ஆறுமுகம், செங்குட்டுவன், எஸ்.கே.பி.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.