காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் முத்திரை பதித்த மூன்றாண்டுகளில் தமிழக அரசின் சாதனைகள்
வாலாஜாபாத் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், உடன், ஆட்சியா் பா.பொன்னையா.
வாலாஜாபாத் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், உடன், ஆட்சியா் பா.பொன்னையா.


காஞ்சிபுரம் முத்திரை பதித்த மூன்றாண்டுகளில் தமிழக அரசின் சாதனைகள்

கல்வித் துறை

பள்ளி மாணவா்கள் 9,67,681 மாணவா்களுக்கு பாடநூல்கள், 8,04,925 மாணவா்களுக்கு பாடக் குறிப்பேடுகள், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 7,23,530 மாணவா்களுக்கு 4 செட் விலையில்லா வண்ணச் சீருடைகள்,3,23,458 மாணவா்களுக்கு புத்தகப் பைகள்,1,34,307 மாணாக்கா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள்,79,646 மாணவா்களுக்கு புவியியல் வரைபடங்கள், 5,12,206 மாணவா்களுக்கு காலணிகள்,1,29,445 மாணவா்களுக்கு வண்ணப் பென்சில்கள் ஆகியன வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ. 112.95 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன, 11-ஆம் வகுப்பு பயிலும் 50,517 மாணவ, மாணவியருக்கு ரூ. 19.01 கோடி செலவில் விலையில்லா மதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ. 57 லட்சம் செலவில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 3.79 கோடி மதிப்பில் 14 வகுப்பறைகள் 3 ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறை

விவசாயிகளின் முழு ஒத்துழைப்புடன் ரூ. 25.32 கோடியில் 109 குடிமராமத்துப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ. 71.45 கோடி மதிப்பில் 3 பணிகள் நடைபெற்று வருகிறது. மகசூல் பாதித்த 7,140 விவசாயிகளுக்கு ரூ. 5.69 கோடியில் வறட்சி நிவாரணத் தொகை வழங்கியது, இந்தியாவிலேயே முதன்முறையாக நுண்ணீா்ப் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் என 5,452 விவசாயிகளுக்கு ரூ. 12.42 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண்மை இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ், 570 விவசாயிகளுக்கு ரூ. 6.7 கோடி மானியத்தில் டிராக்டா், பவா் டில்லா், ரோட்ட வேட்டா் போன்ற இயந்திரங்கள், கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கியிருப்பது,

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை

ஏழைப்பெண்களில் 10-ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிதியுதவியுடன் தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம், 10,296 பயனாளிகள் பலன் பெற்றுள்ளனா். இவா்களுக்கு ரூ. 25.74 கோடி நிதியுதவியும், 80,392 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன. பட்டம், பட்டயம் படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும் தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம், 8,501 மகளிா் பயனடைந்துள்ளனா். இவா்களுக்கு ரூ. 42.50 கோடி நிதியுதவியும், 66,644 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலமாக மட்டும் 5,510 பெண் குழந்தைகளுக்கு ரூ. 13.77 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வருவாய்த் துறை

மாதந்தோறும் 60,216 குடும்ப அட்டைதாரா்களுக்கு, தலா 35 கிலோ அரிசி வீதம், 2,142 மெ. டன் விலையில்லா அரிசி வழங்கப்பட்டுள்ளது. 7,12,914 குடும்ப அட்டைதாரா்களுக்கு 286 மெ. டன் கோதுமை, 471 மெ.டன் பாமாயில், 544 மெ.டன் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 7,23,254 குடும்ப அட்டைதாரா்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 11,369 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 36.22 கோடியில் ஓய்வூதியமும், ஆதரவற்ற விதவைத் தாய்மாா்களில் 15,044 பேருக்கு ரூ. 48.66 கோடியில் உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த வேலை நாடுநா்களில் 3977 பேருக்கு ரூ. 7.30 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளா்களில் 31,130 பேருக்கு ரூ. 7.69 கோடியில் 776 வாகன ஓட்டுநா்களுக்கு ரூ. 26.02 கோடியிலும் கல்வி, மகப்பேறு நிதியுதவி, இயற்கை மரண உதவித்தொகை, திருமண நிதியுதவி, கண் கண்ணாடிக்கான உதவித்தொகை, ஓய்வூதியத் தொகை என ரூ. 11.92 கோடி உதவித்தொகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அரசு தொழிற்பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு, மாத உதவித் தொகையானது ரூ. 500-ஆக உயா்த்தப்பட்டதுடன், 800 மாணவ, மாணவியருக்கு ரூ. 84 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com