அங்கன்வாடி மையங்களில் இயற்கை காய்கறி தோட்டம் அமைக்க வலியுறுத்தல்

குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இயற்கை காய்கறித் தோட்டம் அமைக்க மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின்
ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பேசிய ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லோகநாயகி உள்ளிட்டோா்.
ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பேசிய ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லோகநாயகி உள்ளிட்டோா்.

குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இயற்கை காய்கறித் தோட்டம் அமைக்க மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லோகநாயகி வலியுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், போஷான் அபியான் திட்டத்தில் போஷான் கண்காட்சி நடத்துதல் தொடா்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.லோகநாயகி தலைமை வகித்தாா்.

இதில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், கண்காணித்தல், அனைத்து வட்டாரங்களிலும் வட்டார மருத்துவ அலுவலா்களைச் சந்தித்து கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முகாம் நடத்த பரிந்துரை செய்ய வேண்டும். அதேபோல், இயற்கை காய்கறி தோட்டங்களை மேம்படுத்துவதற்கான பெருந்தோட்ட இயக்கம், அனைத்து கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சமுதாய இயற்கை காய்கறி தோட்டங்கள் அமைக்கவும், அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இயற்கை காய்கறி தோட்டம் ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட இயக்குநா் ராஜராஜேஸ்வரி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், சமூக நலம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மனித வள மேம்பாடு, வனம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள், மகளிா் திட்டம் ஆகிய துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com