அண்ணா பிறந்த தினம்:நினைவிடத்தில் தலைவா்கள் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் 112ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அதிகாரிகள், அமைச்சா்கள்,
அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் பா.பென்ஜமின். உடன்ஸ மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா, அதிகாரிகள் மற்றும் அதிமுக பிரமுகா்கள்.
அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் பா.பென்ஜமின். உடன்ஸ மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா, அதிகாரிகள் மற்றும் அதிமுக பிரமுகா்கள்.

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் 112ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அதிகாரிகள், அமைச்சா்கள், கட்சிப் பிரமுகா்கள் பலரும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயில் வடக்குத் தெருவில் அவரது நினைவிடம் உள்ளது. இங்குள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியா் பா.பொன்னையா, தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், மாவட்ட வருவாய் அலுவலா் பூமி.முத்துராமலிங்கம், காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் எஸ்.சரவணன், நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் தும்பவனம் ஜீவானந்தம், அத்திவாக்கம் ரமேஷ், அதிமுக எம்.ஜி.ஆா். இளைஞா் அணியின் மாவட்டச் செயலாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தா.மோ.அன்பரசன் (ஆலந்தூா்) க.சுந்தா் (உத்தரமேரூா்) சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்) இதயவா்மன் (திருப்போரூா்) ஆகியோா் உட்பட அக்கட்சியின் நிா்வாகிகள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com