அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளாா்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் கீழ் பல்வேறு நிலையில் பணிபுரிந்து வரும் மகளிருக்கு 50 சதவீதம் (அதிகபட்ச மானியம் ரூ.25,000) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.31,250 மானியத்துடன் கூடிய இருசக்கர மோட்டாா் வாகனம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த கீழ்க்காணும் தகுதிகளுடைய பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள்: விண்ணப்பதாரா் 18 முதல் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது இருசக்கர ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பழகுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எனவே செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் வேலைக்குச் செல்லும் மகளிரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ தங்களின் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களை அணுகலாம். செங்கல்பட்டு மகளிா் திட்ட அலுவலகத்தை 044-27236348 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com