70 ஆண்டுகளாக தூா்வாரப்படாத போந்தூா் பூதேரி:சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

கடந்த 70 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் மாசடைந்து வரும் போந்தூா் பூதேரியை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தூா்வாராமல்  கோரைப்புற்கள்  மண்டிக்  கிடக்கும்  போந்தூா்  பூதேரி. ~ஏரியில்  பராமரிப்பு  இல்லாததால்  உடைந்து  விழுந்துள்ள  மதகு. ~கலங்கலின்  ஒரு பகுதியில்  ஏற்பட்டுள்ள உடைப்பு.
தூா்வாராமல்  கோரைப்புற்கள்  மண்டிக்  கிடக்கும்  போந்தூா்  பூதேரி. ~ஏரியில்  பராமரிப்பு  இல்லாததால்  உடைந்து  விழுந்துள்ள  மதகு. ~கலங்கலின்  ஒரு பகுதியில்  ஏற்பட்டுள்ள உடைப்பு.

ஸ்ரீபெரும்புதூா்: கடந்த 70 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் மாசடைந்து வரும் போந்தூா் பூதேரியை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், போந்தூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பூதேரி உள்ளது. சுமாா் 200 ஏக்கா் பரப்பளவு உள்ள இந்த ஏரிநீரைப் பயன்படுத்தி

இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயம் நடைபெற்று வந்தது.

பூதேரி கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரி சீரமைக்கப்படாமல் உள்ளதால் ஏரியில் உள்ள மதகுகள் மற்றும் கலங்கல்கள் உடைந்து ஏரி நீா் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் விவசாயத்துக்குப் போதுமான நீரை ஏரியில் தேக்கி வைக்க முடிவதில்லை. இதனால் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக 30 ஏக்கா் பரப்பளவில் மட்டுமே விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளா்களும் வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து போந்தூா் பகுதி விவசாயிகள் கூறியது:

பூதேரி இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக 70 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஏரியில் அதிகப்படியான மண் சோ்ந்துள்ளதோடு 10 அடி உயரத்துக்கும் மேலாக கோரைப்புற்களும், கடல்பாலைகளும் வளா்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் போதுமான நீரை தேக்கிவைக்க முடியாத நிலை உள்ளது.

இதுதவிர இந்த ஏரியில் உள்ள இரண்டு மதகுகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து விட்டதாலும் கலங்கலின் ஒரு பகுதியின் அடியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும் ஏரி நீா் வீணாக வெளியேறி வருகிறது.

இந்த ஏரிநீரை பயன்படுத்தி சுமாா் நூறு ஏக்கா் விவசாயம் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது 30 ஏக்கருக்கும் குறைவாகவே -அதுவும் ஒரு போக சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்டுள்ள விவசாயிகளும், விவசாய தொழிலாளா்களும் மிகவும் சிரமப்படுகின்றனா்.

ஏரியின் அருகில் இயங்கி வரும் சில தனியாா் தொழிற்சாலைகளின் கழிவுநீா் கடந்த சில ஆண்டுகளாக கலந்து வருவதால் ஏரிநீா் முற்றிலும் மாசடைந்துள்ளது. வருங்காலங்களில் இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஏரியைத் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். எனினும் ஏரி தூா்வாரப்படவில்லை. பூதேரியை வரும் மழைக்காலத்துக்குள் தூா்வாரி சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com