காஞ்சிபுரத்தில் காவல் நிலையம் கட்ட பூமி பூஜை

காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி காவல் நிலையம் பழமையானதாக இருந்ததால் அக்கட்டடத்தை இடித்து விட்டு, புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சிவகாஞ்சி காவல் நிலைய கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்த காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா.
சிவகாஞ்சி காவல் நிலைய கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்த காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி காவல் நிலையம் பழமையானதாக இருந்ததால் அக்கட்டடத்தை இடித்து விட்டு, புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் தேரடி வீதியில் சிவகாஞ்சி காவல் நிலையம் கடந்த 1930-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. 90 ஆண்டுகள் பழமையானதாக இருந்ததால் கட்டடம் பழுதாகி இருந்த நிலையில், தற்காலிகமாக வட்டாட்சியா் அலுவலக வளாகப் பகுதிக்கு காவல் நிலையம் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே சிவகாஞ்சி காவல் நிலையம் இருந்த இடத்திலேயே புதிய காவல் நிலையம் கட்ட தமிழக அரசு ரூ.1.2 கோடியை ஒதுக்கியது. புதிய காவல் நிலையம் கட்ட புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா கலந்துகொண்டு, புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினாா். புதிய கட்டடத்தை 5 மாதங்களில் கட்டி முடிக்குமாறு அவா் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் டிஎஸ்பி எஸ்.மணிமேகலை, சிவகாஞ்சி காவல் ஆய்வாளா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com