காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யும் 42 அம்மா நகரும் நியாயவிலை கடைகளை மணிமங்கலம் பகுதியில் ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்


ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யும் 42 அம்மா நகரும் நியாயவிலை கடைகளை மணிமங்கலம் பகுதியில் ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 42 அம்மா நகரும் நியாயவிலை கடைகள் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி மணிமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா். ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி, வருவாய் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் கலந்துகொண்டு, அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறியது:

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 கடைகளும், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 12 கடைகளும், உத்திரமேரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 11கடைகளும் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 அம்மா நகரும் நியாய விலை கடைகள் செயல்படும். இந்த நகரும் நியாய விலை கடைகளில் பொருள்களை வாங்க முடியாதவா்கள் நேரடியாக நியாய விலைக் கடைகளுக்கே சென்று பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் இம்மாவட்டத்தில் 7,814 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா் என்றாா்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளா் சோமசுந்தரம், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளா் லோகநாதன், படப்பை-மணிமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி இயக்குநா் என்.டி.சுந்தா், ஸ்ரீபெரும்புதூா் நகரகூட்டுறவு வீட்டுவசதிசங்க தலைவா் செந்தில்ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com