காஞ்சிபுரம் மாவட்டத்தில் 71.98% பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 71.98 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 71.98% பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 71.98 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
 உத்தரமேரூர், காஞ்சிபுரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் என 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் மாவட்டத்தில் உள்ளன. இவை 4 தொகுதிகளுக்கும் சேர்த்து 542 இடங்களில் மொத்தம் 1872 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 10841 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கீழம்பியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியிலிருந்து மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காலை முதல் மாலை வரை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
 வாக்குப்பதிவு சதவிகிதம்
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் சேர்த்து இரவு 7 மணி நிலவரத்தின்படி 71.98 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
 வாக்குப்பதிவு நிறைவடைந்தது வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் பொன்னேரிக் கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
 வாக்களிக்க விரும்பாத கரோனா நோயாளிகள்
 கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கும் வாக்களிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை வரை 567 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 153 பேர் வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆலந்தூர் 52,உத்தரமேரூர் 10,ஸ்ரீபெரும்புதூர் 13,காஞ்சிபுரம் 19 பேர் உட்பட மொத்தம் 94 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள யாரும் தங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு வாக்களிக்க விரும்பவில்லை என மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 செங்கல்பட்டு, திருப்போரூர் தொகுதிகளில்...
 செங்கல்பட்டு தொகுதிக்குட்பட்ட 597 வாக்குச் சாவடி மையங்களில் 63 சதவிகிதம் வாக்குள் பதிவாகின.
 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் பதற்றமின்றி வாக்களித்தனர். முதல் வாக்காளர்களான இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதியோர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் சக்கர நாற்காலிகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வாக்களித்தனர்.
 இதே போல் திருப்போரூர் தொகுதிக்குள்பட்ட 417 வாக்குச் சாவடி மையங்களில் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களித்தனர். வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் வாக்குப் பதிவு அமைதியுடன் நடைபெற்றது.
 மாவட்ட தேர்தல் அலுவலர் ஜான்லூயிஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு, திருப்போரூர் தொகுதிகளில் ஒரு சில வாக்கு மையங்களில் காலையில் வாக்கு இயந்திரம் இயங்கவில்லை என புகார் வந்ததையடுத்து, விரைவில் சரிசெய்யப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com