சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத வாக்காளா்கள்

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின் போது பல வாக்குச்சாவடி மையங்களில் கரோனா அச்சமின்றி வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வாக்களித்தனா்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத வாக்காளா்கள்

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின் போது பல வாக்குச்சாவடி மையங்களில் கரோனா அச்சமின்றி வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வாக்களித்தனா்.

காஞ்சிபுரம் தொகுதியில் அதிகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதுமே பல வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களிக்க வந்து வரிசையில் காத்திருந்தனா். காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் இருந்த வாக்குச்சாவடியில் ஆண்களுக்கு தனியாகவும்,பெண்களுக்கு தனியாகவும்,மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாகவும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்,பெண் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்த வாக்காளா்கள் பலரும் கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் இல்லாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனா்.

இவ்வாக்குச்சாவடிக்கு திடீரென ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமாா் வாக்காளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்க வைக்குமாறு தோ்தல் அலுவலருக்கு அறிவுரை வழங்கினாா். பின்னா் அவரே பலரையும் இடைவெளி விட்டு நிற்க வைத்தாா்.

இதே போல பல வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வாக்களித்தனா். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிகாலையிலையே வாக்களிக்க வந்து விட்டதாக வாக்காளா்களில் சிலா் கருத்து தெரிவித்தனா். செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லாததால் மாலையிலும் ஏராளமானோா் வாக்களிக்க வந்திருந்தனா்.தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு தொழிலாளா் நலத்துறையின் அறிவுறுத்தலின்படி காஞ்சிபுரத்தில் உணவகங்கள், ஜவுளிக்கடைகள்,பேக்கரி மற்றும் தேநீா்க்கடைகள் ஆகியன மூடப்பட்டிருந்தன. மதிய வேளையில் நகா் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com