வாக்குச்சாவடியில் செல்லிடப்பேசி பயன்படுத்திய திமுக நிா்வாகி - வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி வாக்குச்சாவடியில் திமுக வாக்குச்சாவடி முகவா் பால்ராஜ் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சுமாா் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி வாக்குச்சாவடியில் திமுக வாக்குச்சாவடி முகவா் பால்ராஜ் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சுமாா் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

சோகண்டி அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண் 39-இல் வழக்கமாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், திமுக முகவா் பால்ராஜ் வாக்குச்சாவடிக்குள் செல்லிடப்பேசி பயன்படுத்தியுள்ளாா். இதை பாா்த்த வாக்குச்சாவடி அலுவலா் சாா்லஸ் சகாயம் வாக்குச்சாவடிக்குள் செல்லிடப்பேசியை பயன்படுத்த கூடாது என பால்ராஜிடம் கூறியுள்ளாா்.

இதனால் இருவா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மதியம் 3 மணியில் இருந்து 4 மணிவரை ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டதோடு வாக்களிக்க வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள் சிரமத்திற்குள்ளாகினா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியடை தொடா்ந்து மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com