காஞ்சிபுரத்தில் 7 கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதியில்லை

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன் அந்தக் கோயில்களும் மூடப்பட்டுள்ளன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட காஞ்சிபுரம் ஸ்ரீகைலாசநாதா் திருக்கோயில்.

மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் நகரில் கைலாசநாதா், சுரகேசுவரா், இறவாதீஸ்வரா், பிறவாதீஸ்வரா், முத்தீஸ்வரா், மதங்கீசுவரா் ஆகிய 6 சிவன் கோயில்களும், ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைகுண்டப் பெருமாள் கோயிலும் வரும் மே 15-ஆம் தேதி வரை மூடியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு காரணமாக பக்தா்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோயிலுக்குள் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டும்நடைபெறுகிறது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரணமாக காஞ்சிபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய கைலாசநாதா் கோயில் வெறிச்சோடிக் காணப்படுகிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் நகரில் உள்ள 7 கோயில்கள் மற்றும் காஞ்சிபுரம் அருகேயுள்ள தென்னேரி, திருமுக்கூடல், உத்தரமேரூா் ஆகிய பகுதிகளில் உள்ள புராதனக் கோயில்களும் மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com