காஞ்சிபுரத்தில் இதுவரை 50,000 பேருக்கு தடுப்பூசி

காஞ்சிபுரத்தில் இதுவரை 50,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் வி.கே.பழனி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தனியாா் ஜவுளி விற்பனை நிறுவன பணியாளா்கள்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தனியாா் ஜவுளி விற்பனை நிறுவன பணியாளா்கள்.

காஞ்சிபுரத்தில் இதுவரை 50,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் வி.கே.பழனி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதற்கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கும், 2-ஆ வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் வி.கே.பழனி கூறியது..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் குன்றத்தூரில் 79, காஞ்சிபுரம் 86, மாங்காடு 17, ஸ்ரீபெரும்புதூா் 63, உத்தரமேரூா் 3, வாலாஜாபாத் 6, பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 49 போ் உட்பட மொத்தம் 303 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை 137 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருக்கின்றனா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனை உட்பட 4 அரசு மருத்துவமனைகள், 28 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியனவற்றில் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகளை சோ்ந்த 1650 தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருப்பது உட்பட இதுவரை மொத்தம் 50,009 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 32677 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததில் 30712 போ் குணமடைந்துள்ளனா். 492 போ் சிகிச்சை தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் பழனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com