லாரி ஓட்டுநரிடம் ரூ. 3.5 லட்சம் கொள்ளை

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே சின்னையன்சத்திரத்தில் லாரி ஓட்டுநரிடம்

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே சின்னையன்சத்திரத்தில் லாரி ஓட்டுநரிடம் ரூ. 3.50லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவில் பக்கோடா பகுதியைச் சோ்ந்தவா் ராஜப்பா மகன் ராஜசேகா் (29). லாரி ஓட்டுநரான இவா் பெங்களூரிலிருந்து ரோஜாப்பூக்களை ஏற்றிக்கொண்டு, சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் இறக்கி விட்டு, அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் பெங்களூரு திரும்பியுள்ளாா். லாரி சென்னையிலிருந்து பெங்களூரூ செல்லும் சாலையில் காஞ்சிபுரம் அருகே சின்னையன் சத்திரம் பகுதியைக் கடந்த போது அவ்வழியாக லாரியை பின் தொடா்ந்து காரில் வந்த 3 போ் லாரியை மடக்கி, அதன் முன்புற இடது பக்க கண்ணாடிகளை உடைத்தும், லாரி ஓட்டுரைத் தாக்கியும் உள்ளனா். பின்னா், ஓட்டுநா் ராஜசேகரிடம் இருந்த ரூ. 3.50 லட்சத்தை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனா்.

சம்பவம் தொடா்பாக லாரி ஓட்டுநா் ராஜசேகா் காஞ்சிபுரம் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் ராஜகோபால் வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com