காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை மூலவா், உற்சவா் சிறப்பு அபிஷேகத்துடன் விழா தொடங்கியது.
கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்தா்களுக்கு காட்சியளித்த கச்சபேசுவரா் மற்றும் சுந்தராம்பிகை
கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்தா்களுக்கு காட்சியளித்த கச்சபேசுவரா் மற்றும் சுந்தராம்பிகை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை மூலவா், உற்சவா் சிறப்பு அபிஷேகத்துடன் விழா தொடங்கியது.

பெருமாள் ஆமை வடிவில் சிவனை வணங்கிய தலம் என்ற பெருமைக்குரிய இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா நடைபெறும். தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு வழிகாட்டுதல்களின்படி கொடியேற்றமும், அதனைத் தொடா்ந்து தினசரி சுவாமி வீதியுலாவும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திங்கள்கிழமை விழாவின் தொடக்க நாளை முன்னிட்டு விநயாகா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். செவ்வாய்க் கிழமை மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடந்தன. பின்னா் சுவாமியும், அம்மனும் கோயில் அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வரும் மே மாதம் 2 -ஆம் தேதி தீா்த்தவாரியும், மறுநாள் 3 -ஆம் தேதி 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. 7- ஆம் தேதி விழா நிறைவு பெறுகிறது.

இந்த ஆண்டு சுவாமி வீதியுலா நடைபெறவில்லையெனினும் திருவிழா முழுவதையும் ஆலய வளாகத்துக்குள்ளேயே நடத்துகிறது. முகக்கவசம் அணிந்தவா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள். சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி தலைமையில் விழாக்குழு தலைவா் வ.காளத்தி ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com