மதியம் 3 மணிக்கு மேல் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயங்காது: அரசுப் போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

காஞ்சிபுரத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் அரசுப்பேருந்துகள் மதியம் 3 மணிக்குப் பிறகு இயங்காது என அரசுப் போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கடைசியாக செல்லும் பேருந்துகள் பற்றிய நேர அறிவிப்பு பலகை
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கடைசியாக செல்லும் பேருந்துகள் பற்றிய நேர அறிவிப்பு பலகை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் அரசுப்பேருந்துகள் மதியம் 3 மணிக்குப் பிறகு இயங்காது என அரசுப் போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பொதுப்போக்குவரத்து இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகால 4 மணி வரை எந்தப்பேருந்தும் இயங்காது. எனவே பயணிகள் அனைவரும் தங்களது பயணத்தினை அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வேண்டும்.

குறிப்பாக தொலைதூரம் செல்லும் பயணிகள் இரவு 10 மணிக்குள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு செல்ல தங்களின் பயணத்தினையும், பயண நேரத்தினையும் கருத்தில் கொண்டு புறப்பட வேண்டிய நேரத்தினை திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பயணிகள் பேருந்தில் பயணிக்கு அனுமதிக்கப்படுவாா்கள். காஞ்சிபுரத்தலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் மதியம் 3 மணி வரை மட்டுேம் செல்லும். வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளாக இருந்தால் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்கும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு பலகை..

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பூந்தமல்லி, தாம்பரம், செங்கல்பட்டு, வேலூா் ஆகிய ஊா்களுக்கு கடைசிப் பேருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது. இதே போல காஞ்சிபுரத்திலிருந்து மாலையில் கடைசியாக புறப்படும் பேருந்துகளில் திருச்சி 15.15, சேலம் 14.30,விழுப்புரம் 19.00 , திருவண்ணாமலை 18.00 , செய்யாறு, திருப்பதி, திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு கடைசிப் பேருந்து இரவு 8 மணிக்கு செல்லும் எனவும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com