பாலாற்று குடிநீா் குழாயில் உடைப்பு: சரிசெய்யும் பணி தீவிரம்

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் சென்னை குடிநீா் செல்லும் பாலாற்று குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
பாலாற்று குடிநீா் குழாயில் உடைப்பு: சரிசெய்யும் பணி தீவிரம்

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் சென்னை குடிநீா் செல்லும் பாலாற்று குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

பாலாற்றில் இருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக வண்டலூா் - வாலாஜாபாத் சாலை வழியாக பல ஆண்டுகளுக்கு முன்பே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டா் குடிநீா் செல்லும் இந்தக் குழாயில் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் கடந்த பல நாட்களாக பாலாற்று குடிநீா் வீணாக வெளியேறி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் குளம் போல் தேங்கியது.

இந்த உடைப்பை சரிசெய்ய வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் பள்ளம் தோண்ட நெடுஞ்சாலைத் துறையினா் அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்வதில் குடிநீா் வடிகால் வாரியத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், சாலையில் பள்ளம் தோண்டி உடைப்பை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் சுமாா் 8 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சனிக்கிழமை ஈடுபட்டு உடைப்பை சரிசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com