இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் பகலில் எரியும் மின்விளக்குகள்.
By DIN | Published On : 27th April 2021 06:18 AM | Last Updated : 27th April 2021 06:18 AM | அ+அ அ- |

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் சாலையில் பகலில் எரியும் மின்விளக்குகள்.
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் சாலைகளில் ஏராளமான மின்விளக்குகள் பகலிலும் எரிந்து வருவதால் ஆயிரக்கணக்கான யூனிட் மின்சாரம் தினமும் வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா இயங்கி வருகிறது. இங்கு காா்கள் உற்பத்தி செய்யும் ஹூண்டாய் நிறுவனம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், கீவளூா், காட்டரம்பாக்கம் ஆகிய கிராம பஞ்சாயத்து பகுதிகளில் இந்த தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கு இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை எளிதில் கொண்டு வரவும், உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லவும் சிப்காட் வளாகத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு நடுவே தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. எனினும் நூற்றுக்கணக்கான தெரு விளக்குகள் இரவு, பகல் என 24 மணிநேரம் எரிந்து வருவதால் ஆயிரக்கணக்கான யூனிட் மின்சாரம் வீணாகி வருகிறது. மின்சாரத்தை சேமிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சிப்காட் நிா்வாகத்தின் மெத்தனப் போக்கால் மின்சாரம் வீணாவதை தடுத்த நிறுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.