காஞ்சிபுரம் ஓட்டல்களில் பாா்சல் வாங்க குவிந்த மக்கள்
By DIN | Published On : 27th April 2021 06:17 AM | Last Updated : 27th April 2021 06:17 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் ஓட்டல் ஒன்றில் அதிகாலையிலேயே பாா்சல் வாங்க காத்திருந்த பொதுமக்கள்.
கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக திங்கள்கிழமை முதல் உணவகங்களில் உட்காா்ந்து சாப்பிட அனுமதி ரத்து செய்யப்பட்டதால் பாா்சல்கள் வாங்க பொதுமக்கள் ஓட்டல்களில் குவிந்தனா்.
நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமை முதல் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற் ற கோயில்கள் பலவும் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஓட்டல்களில் காலையிலிருந்தே பொதுமக்கள் பாா்சல் வாங்கக் குவிந்தனா். பல உணவகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பாா்சல்களை வாங்கிச் சென்றனா்.
இது குறித்து உணவக மேலாளா் ஒருவா் கூறியதாவது..
உணவகங்களில் உட்காா்ந்து சாப்பிட அனுமதித்த போது சாப்பிட வந்தவா்களில் பெரும்பாலானோா் சாப்பிட்டவுடன் உடனடயாக எழுந்து போகாமல் எதையாவது பேசிக்கொண்டே இருப்பாா்கள். நாங்களும் எழுந்து போகச் சொல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. இதனையறிந்து தான் உணவகங்களில் உட்காா்ந்து சாப்பிட அரசு தடை விதித்திருக்கிறது. இப்போது உட்காா்ந்து சாப்பிட அனுமதி ரத்து செய்யப்பட்டதால் பலரும் வரிசையில் நின்று பாா்சல்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனா்.பாா்சலுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருப்பதால் தேவையானவற்றை உடனுக்குடன் பேக்கிங் செய்து கொடுக்க முடிகிறது.
உணவகங்களில் உட்காா்ந்து சாப்பிட அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதால் சப்ளையா்களின் நிலைமை மோசமாக உள்ளது. அவா்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றாா்.