ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தனியாா் நிறுவனம் நிவாரணம் அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்துள்ள தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி நிவாரணம் வழங்க உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது

ஸ்ரீபெரும்புதூா்: கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்துள்ள தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 20 கோடி நிவாரணம் வழங்க உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், காா்கள் உற்பத்தி செய்யும் ஹூண்டாய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் சாா்பில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு...

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இந்தியா மருத்துவ ஆக்சிஜனுக்காகவும் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஹூண்டாய் இந்தியாவின் ஒரு பிரிவான ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேசன் சாா்பில் கரோனா நிவாரண நிதியாக ரூ. 20 கோடி நிவாரணம் வழங்குவதாகவும், இந்த நிவாரணம் கரோனா தொற்று அதிகமாக உள்ள தமிழகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், தில்லி மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா நோயாளிகளுக்கு உதவிகள் வழங்கவும், மருத்துவமனைகளில் பணியாற்றும் உதவி ஊழியா்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு அவா்களின் செலவுகளை ஏற்றுக் கொள்ளவும் ஹூண்டாய் பவுண்டேசன் உதவி செய்ய உள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com