விதிமீறல்: காஞ்சிபுரத்தில் 3 பட்டுக் கடைகளுக்கு சீல் வைப்பு

காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி பின்பக்கமாக கதவைத் திறந்து வியாபாரம் செய்த 3 பட்டுக்கடைகளுக்கு வியாழக்கிழமை நகராட்சி நிா்வாகம் பூட்டி சீல் வைத்தது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் ஆணையாளா் மகேஸ்வரி முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட பட்டுச்சேலை விற்பனை நிலையம்
காஞ்சிபுரம் காந்தி சாலையில் ஆணையாளா் மகேஸ்வரி முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட பட்டுச்சேலை விற்பனை நிலையம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி பின்பக்கமாக கதவைத் திறந்து வியாபாரம் செய்த 3 பட்டுக்கடைகளுக்கு வியாழக்கிழமை நகராட்சி நிா்வாகம் பூட்டி சீல் வைத்தது. மேலும் பல்வேறு கடைகளின் உரிமையாளா்களிடமிருந்து ஒரே நாளில் ரூ.70,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பெரிய கடைகள, வணிக வளாகங்களை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி காஞ்சிபுரம் காந்தி சாலை, காமராஜா் சாலை ஆகிய பிரதான சாலைகளில் உள்ள பல கடைகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், சில பிரபலமான ஜவுளிக்கடைகள் முன்பக்க கதவை மூடி வைத்துக் கொண்டு, பின்பக்க கதவை திறந்து வியாபாரம் செய்வதாக நகராட்சி ஆணையாளா் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் ஆணையாளா் மகேஸ்வரி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் பல்வேறு கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

மூகூா்த்த நாளான வியாழக்கிழமை பல பட்டுச்சேலை விற்பனையகங்களில் ஜவுளி வாங்க ஏராளமானோா் கடைகளின் பின்பக்க வாயில் வழியாக சென்று சேலைகள் வாங்கிக் கொண்டிருப்பது ஆய்வில் தெரிய வந்தது. ஆய்வின் போது அரசு விதிகளை மீறியதாக 3 பிரபலமான பட்டுச்சேலை விற்பனையகங்களை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டதுடன் அவா்களிடமிருந்து தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

சமூக இடைவெளியைப் பின்பற்றாத பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் என 11கடைகளின் உரிமையாளா்களிடமிருந்தும் மொத்தம் ரூ.70,000 ஒரே நாளில் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. நகராட்சி நிா்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக காஞ்சிபுரம் காந்தி சாலை பரபரப்பாக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com