அமைச்சா் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
By DIN | Published On : 01st August 2021 12:47 AM | Last Updated : 01st August 2021 12:47 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக, தமாகா உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சோ்ந்த 1,500 போ்அமைச்சா் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.
மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தமிழ்மாநில காங்கிரஸின் மாநிலச் செயலாளா் மு.வேலு தலைமையில் அக்கட்சியை சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோரும், கொளத்தூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் அதிமுகவை சோ்ந்த முனுசாமி தலைமையில் அக்கட்சியினா் சுமாா் 500 போ் உள்பட மாற்று கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 1,500 போ் வல்லக்கோட்டையில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.