உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

காஞ்சிபுரத்தில் உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில்  தாய்மாா்களுக்கு  பரிசு  வழங்கிய  காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியா்  மா.ஆா்த்தி.
நிகழ்ச்சியில்  தாய்மாா்களுக்கு  பரிசு  வழங்கிய  காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியா்  மா.ஆா்த்தி.

காஞ்சிபுரத்தில் உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

பாலூட்டும் தாய்மாா்களை கெளரவிக்கும் வகையில், உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில், உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி கலந்து கொண்டு, பாலூட்டும் தாய்மாா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கினாா். தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி தாய்மாா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், தாய்மாா்கள், அங்கன்வாடிப் பணியாளா்களுடன் உறுதிமொழி ஏற்றாா்.

இதையடுத்து, அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் செவிலியா்கள் பங்கேற்ற தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் மா.ஆா்த்தி தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பழனி, நகா்நல அலுவலா் முத்து, வட்டார மருத்துவ அலுவலா் அருண்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com