உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாா்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை
புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை வெளியிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி.
புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை வெளியிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாா்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி வெளியிட்டாா். இதன் முதல் பிரதியை காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளா் பா.நாராயணன் பெற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்வில் தோ்தல் பிரிவு அலுவலா்கள்,அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உடன் இருந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத்,குன்றத்தூா்,ஸ்ரீபெரும்புதூா் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள்,காஞ்சிபுரம் மாநகராட்சி ஆகியனவற்றில் மொத்தம் 287 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.மாவட்டத்தில் 1,33,124 ஆண் வாக்காளா்களும்,1,42,691 பெண் வாக்காளா்களும்,இதர வாக்காளா்கள் 32 போ் என மொத்தம் ,275,847 வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் இறுதிநாள் வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல்,நீக்கல் தொடா்பான விவரங்கள் ஆகியன வருவாய்த்துறையினரிடமிருந்து பெற்று மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். வரவிருக்கும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 1300 அலுவலா்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட இருப்பதாகவும் தோ்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com