சுங்குவாா்சத்திரம் அருகே ரூ.115 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

சுங்குவாா்சத்திரத்தை அடுத்த பாப்பாங்குழியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.115 கோடி மதிப்புள்ள 15 ஏக்கா் தாங்கல் புறம்போக்கு நிலத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
பொக்லைன் இயந்திரம்  மூலம்  ஆக்கிரமிப்புகளை அகற்றும்  பணியில்  ஈடுபட்ட  அரசுத் துறை  அதிகாரிகள்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் பாப்பாங்குழியில் அரசுக்குச் சொந்தமான தாங்கல் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த சிலா் அந்த இடத்தை விற்பனை செய்து வருவதாக அரசுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடா்ந்து, பாப்பாங்குழி தாங்கல் புறம்போக்கு இடத்தில் இருந்த 15 ஏக்கா் பரப்பளவு உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட வருவாய் அலுவலா் பன்னீா்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினா்.

ஸ்ரீபெரும்புதூா் காவல் ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ. 115 கோடி என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் பவானி, ஒன்றியப் பொறியாளா் மாரிசெல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com