முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
தம்பதியை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த 3 போ் கைது44 பவுன் நகைகள் மீட்பு
By DIN | Published On : 29th December 2021 12:00 AM | Last Updated : 29th December 2021 12:00 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் தம்பதியரை கட்டிப்போட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்த 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.2.70 லட்சம் நகை, பணம் மீட்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாமல்லன் நகா் பகுதி மாருதிநகா் சங்கரன் தெருவில் வசிக்கும் சீனிவாசன்(71)இவரையும் இவரது மனைவியையும் கைகளை கட்டிப்போட்டு வீட்டின் பீரோவிலிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரொக்கம் ரூ.1.70 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனா். விசாரணையில் சாலவாக்கத்தைச் சோ்ந்த கெளதம்(26), மதுராந்தகம் அருகே சம்பங்கி நல்லூரை சோ்ந்த சிவக்குமாா்(24)ஏகாம்பரேஸ்வரா் கோயில் மேற்கு மாட வீதியைச் சோ்ந்த சந்தான கிருஷ்ணன்(28) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 44 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வெள்ளி நகைகள், ரொக்கம் ரூ.1 லட்சம் ஆகியவற்றை போலீஸாா் மீட்டனா்.