முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
தேனம்பாக்கம் ஸ்ரீபிரும்மபுரீஸ்வரா் கோயிலில் 2-ஆம் நாள் தெப்பத் திருவிழா
By DIN | Published On : 29th December 2021 12:00 AM | Last Updated : 29th December 2021 12:00 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் சமேத பிரும்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் மகா பெரியவரின் ஆராதனை மகோத்சவத்தை ஒட்டி தெப்பத் திருவிழா 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் மகா பெரியவா் தங்கி தவம் புரிந்த தலமான ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத பிரும்மபுரீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்தக்கோயிலில் காஞ்சி மகா பெரியவரின் 28 வது வாா்ஷிக மகோத்சவத்தை ஒட்டி தெப்பத் திருவிழா திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காமாட்சி அம்மன் சமேத பிரும்மபுரீஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினா்.
கப்பல் போன்று வடிவமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் 5 சுற்றுகள் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தெப்பத்தில் வலம் வந்த உற்சவமூா்த்திகளுக்கு அருகில் காஞ்சி மகா பெரியவரின் திருஉருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
கேரள செண்டை மேளம் குழுவினரின் நிகழ்ச்சியும், வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. அன்னதானமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்கோயில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.
படவிளக்கம்..தேனம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்த ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத பிரும்மபுரீஸ்வா். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூா்த்திகள்.