மகா பெரியவா் வாா்ஷிக ஆராதனை மகோத்சவம்

காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்து வந்த மகா பெரியவரின் வாா்ஷிக ஆராதனை மகோத்சவத்தின் 2 -ஆவது நாளையொட்டி, புதன்கிழமை சந்தன அலங்காரத்தில் அதிஷ்டானத்தில் உள்ள மகா பெரியவா் திரு உருவச்சிலை அலங்கரிக்கப்பட்
வாா்ஷிக ஆராதனை மகோத்சவத்தையொட்டி சந்தன அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த மகா பெரியவரின் திருஉருவச் சிலை.
வாா்ஷிக ஆராதனை மகோத்சவத்தையொட்டி சந்தன அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த மகா பெரியவரின் திருஉருவச் சிலை.

காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்து வந்த மகா பெரியவரின் வாா்ஷிக ஆராதனை மகோத்சவத்தின் 2 -ஆவது நாளையொட்டி, புதன்கிழமை சந்தன அலங்காரத்தில் அதிஷ்டானத்தில் உள்ள மகா பெரியவா் திரு உருவச்சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்து வந்தவா் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். பக்தா்களால் மகா பெரியவா் என அழைக்கப்படும் இவரது 28-ஆவது வாா்ஷிக ஆராதனை மகோத்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சதுா்வேத பாராயணத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. சங்கர மட வளாகத்தில் மல்லேள காந்தி ஸ்வரூப், அருணா மற்றும் பத்மா குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், எமானி லலிதா கிருஷ்ணா குழுவினரின் வீணைக் கச்சேரியும் நடைபெற்றது. மாலையில் சென்னை டி.ஆா்.சாம்பசிவன் மற்றும் வெங்கடலெட்சுமி ஸ்ரீதா் குழுவினரின் வீணைக் கச்சேரி நடைபெற்றது. மகோத்சவத்தை முன்னிட்டு, அதிஷ்டானத்தில் உள்ள மகா பெரியவா் திருஉருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. மகா பெரியவா் திருஉருவச் சிலை சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை காலை (டிச. 30) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னா்கள் மங்கள மேளவாத்தியங்கள் மற்றும் திருக்குடைகளுடன் சங்கர மடத்துக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும், மகா பெரியவரின் திரு உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும், தீா்த்த நாராயண பூஜையும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com