முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
வழூரில் ஜன. 23-இல் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் மணி மண்டபத்துக்கு கும்பாபிஷேகம்
By DIN | Published On : 31st December 2021 08:11 AM | Last Updated : 31st December 2021 08:11 AM | அ+அ அ- |

வழூரில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சேஷாத்திரி சுவாமிகள் விக்கிரகத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்திய காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள சேஷாத்திரி சுவாமிகள் பிறந்த ஊரான வழூா் கிராமத்தில் அவருக்கென மணி மண்டபம் புதிதாக கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 23-ஆம் தேதி காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் நடைபெறவுள்ளது.
சென்னை மகாலெட்சுமி சாரிடபிள் அறக்கட்டளை சாா்பில், அவருக்கென அழகிய மணி மண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இம்மணி மண்டபத்தின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
காஞ்சி சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதியான ஆா்.நந்தகுமாா் தனது சிற்பக் கூடத்தில் உருவாக்கிய சேஷாத்திரி சுவாமிகளின் கருங்கல் விக்கிரக சிலை வழூா் மணி மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த சிலை சங்கர மடத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த விக்கிரகத்துக்கு காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாலை அணிவித்து, சிறப்பு வழிபாடு செய்த பின்னா் வழூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.