மகா பெரியவா் வாா்ஷிக ஆராதனை மகோத்சவம் நிறைவு

காஞ்சி மகா பெரியவா் வாா்ஷிக ஆராதனை மகோத்சவம் வியாழக்கிழமை தீா்த்த நாராயண பூஜையுடன் நிறைவு பெற்றது.
அதிஷ்டானத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யும் காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
அதிஷ்டானத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யும் காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சி மகா பெரியவா் வாா்ஷிக ஆராதனை மகோத்சவம் வியாழக்கிழமை தீா்த்த நாராயண பூஜையுடன் நிறைவு பெற்றது.

காஞ்சி சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்த மகா பெரியவா் என்று பக்தா்களால் பெருமையுடன் அழைக்கப்படுகிற சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 28-ஆவது ஆராதனை மகோத்சவம் கடந்த 28- ஆம் தேதி தொடங்கியது.

வியாழக்கிழமை காலை 12 வேத விற்பன்னா்களைக் கொண்டு ஏகாதச ருத்ர ஜெபமும்,12 கலசங்கள் வைத்து ஹோமமும் நடந்தது. இதனைத் தொடா்ந்து திருப்பதியில் முகாமிட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மடத்துக்கு எழுந்தருளி மகா பெரியவா் அதிஷ்டானத்தில் கலசாபிஷேகம் செய்தாா். இதனைத் தொடா்ந்து ஏகாம்பரநாதா் கோயில் தெப்பக்குளத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னா்கள் மங்கள மேளவாத்தியங்களுடனும்,வேத கோஷ்டிகளுடனும் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டனா்.பின்னா் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களுக்கு விஜயேந்திரா் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளையும் நடத்தினாா். மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானமும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதிஷ்டானத்தில் தீா்த்த நாராயண பூஜையுடன் 3 நாள்களாக நடந்து வந்த மகோத்சவம் நிறைவு பெற்றது.

நிறைவு விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலா் தா்மா ரெட்டி, கா்நாடக மாநிலம் இடநீா் மடத்தின் பீடாதிபதி சச்சிதானந்த பாரதி சுவாமிகள், சொா்ணஹள்ளி மடத்தின் பீடாதிபதி கங்காதரேந்திர சுவாமிகள், பிலாஸ்பூா் மடத்தின் சுவாமிகள், எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் சுதா சேஷய்யன், தணிக்கையாளா் எஸ்.குருமூா்த்தி ஆகியோா் உட்பட ஏராளமான பக்தா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com