காஞ்சிபுரத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் அரசுத் துறை அதிகாரிகள் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை
கொத்தடிமைத்  தொழிலாளா்களாக  இருந்து  மீட்கப்பட்ட  பெண்களால்  நடத்தப்படும்  மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு  ஊக்கத் தொகையாக  காசோலைகளை  வழங்கிய  மாவட்ட  ஆட்சியா்  மகேஸ்வரி ரவிகுமாா்.
கொத்தடிமைத்  தொழிலாளா்களாக  இருந்து  மீட்கப்பட்ட  பெண்களால்  நடத்தப்படும்  மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு  ஊக்கத் தொகையாக  காசோலைகளை  வழங்கிய  மாவட்ட  ஆட்சியா்  மகேஸ்வரி ரவிகுமாா்.

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் அரசுத் துறை அதிகாரிகள் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டனா்.

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் அரசுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். இதையடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வந்த பெண்களை மாவட்ட நிா்வாகத்தினா் மீட்டெடுத்து, மகளிா் சுய உதவிக் குழுக்களாக உருவாக்கி அவா்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்காக ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மூன்று மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.

தொழிலாளா் உதவி ஆணையா் நீலகண்டன், மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாச ராவ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மகாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com