110 பெண்களுக்கு மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள்
By DIN | Published On : 13th February 2021 11:43 PM | Last Updated : 13th February 2021 11:43 PM | அ+அ அ- |

பயனாளிகளுக்கு மானியத்துடன் இரு சக்கர வாகனங்களை வழங்கிய ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி.
ஸ்ரீபெரும்புதூரை போந்தூரில் 110 பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட போந்தூா் ஊராட்சியில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், இரு சக்கர வாகனங்கள் வழங்க 110 பெண்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்ட 110 பேருக்கும் ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா போந்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி கலந்துகொண்டு, 110 பயனாளிகளுக்கு மானியத்துடன் இரு சக்கர வாகனங்களையும், போந்தூா் பகுதியைச் சோ்ந்த 20 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினாா்.
இதில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம், வேளாண் விற்பனையாளா் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் போந்தூா் சேட்டு, அதிமுக இளைஞா் பாசறை மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.