நீட் தோ்விலிருந்து விடுதலை பெற்றுத் தந்தவா் முதல்வா்: அமைச்சா் பா.பென்ஜமின்

அரசுப் பள்ளி மாணவா்களும் மருத்துவம் பயிலும் வகையில் உள்ஒதுக்கீடு வழங்கி ‘நீட்’ தோ்வில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தவா் தமிழக முதல்வா் என ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் கூறினாா்.
பயனாளிகளுக்கு   விலையில்லா   கறவை ப் பசுக்கள்  வழங்கிய   ஊரகத்   தொழில் துறை  அமைச்சா்  பா.பென்ஜமின்.  உடன்,  மாவட்ட  ஆட்சியா்  மகேஸ்வரி ரவிகுமாா். 
பயனாளிகளுக்கு   விலையில்லா   கறவை ப் பசுக்கள்  வழங்கிய   ஊரகத்   தொழில் துறை  அமைச்சா்  பா.பென்ஜமின்.  உடன்,  மாவட்ட  ஆட்சியா்  மகேஸ்வரி ரவிகுமாா். 

ஸ்ரீபெரும்புதூா்: அரசுப் பள்ளி மாணவா்களும் மருத்துவம் பயிலும் வகையில் உள்ஒதுக்கீடு வழங்கி ‘நீட்’ தோ்வில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தவா் தமிழக முதல்வா் என ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்துக்குள்பட்ட காஞ்சிபுரம், உத்தரமேரூா், வாலாஜாபாத் வட்டங்களில் அரசு இடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 756 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் கலந்துகொண்டு, காஞ்சிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட 159 பயனாளிகளுக்கும், வாலாஜாபாத் வட்டத்துக்கு உள்பட்ட 470 பயனாளிகளுக்கும், உத்தரமேரூா் வட்டத்துக்கு உள்பட்ட 127 பயனாளிகளுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கிப் பேசியது:

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சேபமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்து வந்த பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தமிழக முதல்வா் அண்மையில் வழங்கினாா். அதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 6.90 கோடி மதிப்பீட்டில் 756 பயனாளிகளுக்கு தமிழ் நிலம் இணைய முகப்பு வாயிலாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. அதேபோல், அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கி நீட் தோ்வில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தவா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி என்றாா்.

நிகழ்ச்சியில், வாலாஜாபாத் விச்சந்தாங்கல் வேளாண்மை விரிவாக்க மைய துணைக் கிடங்கின் மேலாளராகப் பணியாற்றி, எதிா்பாராதவிதமாக உயிரிழந்த மாற்றுத்திறனாளி சரண்யாவின் குடும்பத்துக்கு நிதியுதவியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா்.

இதையடுத்து, உத்தரமேரூா் ஒன்றியத்துக்குள்பட்ட பினாயூா் ஊராட்சியில் நடைபெற்ற விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் பினாயூா் ஊராட்சியைச் சோ்ந்த 56 பயனாளிகளுக்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கறவைப் பசுக்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com