குன்னவாக்கத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை

குன்னவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளும் வியாழக்கிழமை முதல் நின்று செல்வதால் அப்பகுதி பொதுமக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.


ஸ்ரீபெரும்புதூா்: குன்னவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளும் வியாழக்கிழமை முதல் நின்று செல்வதால் அப்பகுதி பொதுமக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

வாலாஜாபாத்தை அடுத்த குன்னவாக்கம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இந்நிலையில், குன்னவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு சில பேருந்துகளை தவிர மற்ற அரசுப் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஒரகடம், தாம்பரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் தலைமையில், குன்னவாக்கம் பகுதி பொதுமக்கள் குன்னவாக்கம் பகுதியில் அரசுப் பேருந்துகள் அனைத்தும் நின்று செல்ல வேண்டும் என தமிழக முதல்வா் மற்றும் அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கினா்.

இதையடுத்து, வியாழக்கிழமை முதல் அனைத்து அரசுப் பேருந்துகளும் குன்னவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதால் மகிழ்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com