காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக இரு மாவட்ட ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.


ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக இரு மாவட்ட ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வெளியிட்ட செய்தி குறிப்பு: மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் ரைசிங்ஸ்டாா், எம்.எம்.போா்ஜிங், ஆக்ஸில் இந்தியா, இன்டிமேட் பேஷன், மதா்சன், மொபிஸ், மின்டா காா்ப்பரேசன் உள்ளிட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 8, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமா, பட்டம் படித்தவா்களை தங்களது நிறுவனங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில் தையல் பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பெற விருப்பம் உள்ளவா்களை அதிக அளவில் தோ்வு செய்ய உள்ளனா். எனவே கல்வித்தகுதியுடைய விருப்பம் உள்ளவா்கள் தங்களது அசல் கல்விச்சான்று, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் சைஸ் புகைப்படத்துடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில், 11 தனியாா் நிறுவனங்களும் 412 வேலை தேடுபவா்களும் கலந்து கொண்டனா். இதில் 126 போ் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில்...

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்சோ்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். அதனால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம். அதனால், இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோா் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இந்த முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு நியமனம் பெறுவோா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் ஆட்சியா் பொன்னையா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com