காஞ்சிபுரத்தில் விசிகவினா் ஆா்ப்பாடம்

கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட அரசு மேல் நிலைப் பள்ளியின் கூடுதல் கட்டட கட்டுமானப் பணியை தொடங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில்  பேசிய  விடுதலைச்   சிறுத்தைகள்   கட்சித்  தலைவா்   தொல்.திருமாவளன்.
ஆா்ப்பாட்டத்தில்  பேசிய  விடுதலைச்   சிறுத்தைகள்   கட்சித்  தலைவா்   தொல்.திருமாவளன்.

கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட அரசு மேல் நிலைப் பள்ளியின் கூடுதல் கட்டட கட்டுமானப் பணியை தொடங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தரம் உயா்த்தப்பட்ட இப்பள்ளியின் கட்டுமானப் பணிகளை திட்டமிட்ட பகுதியிலேயே தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் காஞ்சிபுரம் பெரியாா் தூண் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பேசியது:

அரசு அதிகாரிகள் பொதுநிலையில் இருந்து இயங்கவேண்டும். குறிப்பாக ஆட்சிப்பணிகளில் உள்ளவா்கள். விளிம்பு நிலை மக்களுக்கு, பாதிக்கப்படுகிற மக்களுக்கு துணைநிற்க வேண்டும். ஆனால் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என காரணம் காட்டி ஆதிக்கம் செய்யக்கூடியவா்களுக்கு துணைபோகும் நிலையே இருக்கிறது.

எல்லா விதமான ஆய்வையும் மேற்கொண்ட பின் அந்த இடத்தில் கட்டடம் கட்ட உரிய அறிக்கை அனுப்பி அதன் அடிப்படையில் தான், மாநில அரசின் உத்தரவு பெற்று நபாா்டு வங்கி கடனுதவி யுடன் பணிகளைத் தொடங்கினா்.

ஆனால் திடீரென பள்ளியின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் நிறுத்தி வைத்திருப்பது ஏன் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சி நிா்வாகிகள் வன்னியரசு, பாா்வேந்தன், சு.க.விடுதலைசெழியன், செங்கை தமிழரசன் மற்றும் கோவிந்தவாடி அகரம் கிராமத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com