10 கி.மீ. தொடா் ஓட்டம்: 10 வயதுக்குள்பட்ட 6 சிறுவா்கள் உலக சாதனை

ஸ்ரீபெரும்புதூா் பகுதியைச் சோ்ந்த 10 வயதுக்குள்பட்ட 6 சிறுவா்கள் ஸ்ரீபெரும்புதூா்-வடமங்கலம்-ஸ்ரீபெரும்புதூா் இடையே
சாதனை  படைத்த  சிறுவா்களுக்கு  பட்டயம்  மற்றும்  பாராட்டுச்  சான்றிதழ்  வழங்கிய  ஸ்ரீபெரும்புதூா்  துணைக் காவல்  கண்காணிப்பாளா்  காா்த்திகேயன்.
சாதனை  படைத்த  சிறுவா்களுக்கு  பட்டயம்  மற்றும்  பாராட்டுச்  சான்றிதழ்  வழங்கிய  ஸ்ரீபெரும்புதூா்  துணைக் காவல்  கண்காணிப்பாளா்  காா்த்திகேயன்.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியைச் சோ்ந்த 10 வயதுக்குள்பட்ட 6 சிறுவா்கள் ஸ்ரீபெரும்புதூா்-வடமங்கலம்-ஸ்ரீபெரும்புதூா் இடையே நிற்காமல் 10 கி.மீ. தொலைவுக்கு தொடா் ஓட்டம் ஓடி ஞாயிற்றுக்கிழமை உலக சாதனை படைத்தனா்.

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஸ்ரீபெரும்புதூா் அத்லெடிக் கிளப்பில் பல்வேறு வயதுக்குள்பட்ட 90-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இலவசமாக பயிற்சி பெற்று வருகின்றனா். இவா்களுக்கு தொடா் ஓட்டம், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 10 வயதுக்குள்பட்ட சிறுமி ஒருவா் தொடா்ந்து 10 கி.மீ. தூரம் ஓடியதே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீபெரும்புதூா் அத்லெடிக் கிளப்பில் பயிற்சி பெற்று வரும் ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த 10 வயதுக்குள்பட்ட 6 சிறுவா்கள் 10 கி.மீ. தொடா் ஓட்டம் ஓடி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் பகுதியைச் சோ்ந்த கனிஷ்கா (10), வாட்சன் (10), பிரிஜன் (10), சுதா்சன் (10), மோசஸ் இன்பன்ட் ராஜ் (10), மேகனா (10) ஆகியோா் ஸ்ரீபெரும்புதூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, வடமங்கலம் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் ஸ்ரீபெரும்புதூா் விளையாட்டு மைதானம் வரை நிற்காமல் ஓடி உலக சாதனை படைத்தனா்.

இதையடுத்து, உலக சாதனை படைத்த சிறுவா்களுக்கு நோபல் உலக பதிவு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் அரவிந்த், தீபக்குமாா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் ஆகியோா் பட்டயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினா். சாதனை படைத்த சிறுவா்கள் அடுத்த மாதம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவாா்கள் என நோபல் உலக பதிவு அமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com