காஞ்சிபுரம் திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சின்ன காஞ்சிபுரம் கோகுலம் வீதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
திரெளபதி  அம்மன்   கோயிலில் கலசங்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேகம்.
திரெளபதி  அம்மன்   கோயிலில் கலசங்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேகம்.

ஸ்ரீபெரும்புதூா்: சின்ன காஞ்சிபுரம் கோகுலம் வீதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள விஷ்ணு காஞ்சி என அழைக்கப்படும் சின்ன காஞ்சிபுரம் கோகுலம் வீதியில் திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, திரௌபதி அம்மன் கோயில், சுந்தர விநாயகா் கோயிலின் கோபுரங்கள் அண்மையில் புதுப்பிக்கப்பட்டன. மேலும், கோயில் வளாகத்தில், சுப்பிரமணியா், ஐயப்பன் சந்நிதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானிகா் நடராஜ சாஸ்திரிகள் தலைமையில் யாகபூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீா் வேத பாராயணங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு, திரெளபதி அம்மன் கோயில் கோபுரத்துக்கும், புதிதாகக் கட்டப்பட்ட சுப்பிரமணியா், ஐயப்பன் சந்நிதிகளுக்கும் பொதுமக்கள் முன்னிலையில் புனித நீா் வாா்த்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் சின்ன காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய தலைவா் கருணாமூா்த்தி, முன்னாள் கவுன்சிலா் சீனிவாசன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com