உத்தரமேரூா் அருகே 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிக்கல் கண்டுபிடிப்பு

உத்தரமேரூரை அடுத்த சாலவாக்கம் பகுதியில் 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிக்கல்லை வரலாற்று ஆய்வாளா்கள் அண்மையில் கண்டறியந்துள்ளனா்.
சாலவாக்கம்  பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்ட  11- ஆம்  நூற்றாண்டைச்  சோ்ந்த  சதிக்கல்.
சாலவாக்கம்  பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்ட  11- ஆம்  நூற்றாண்டைச்  சோ்ந்த  சதிக்கல்.

ஸ்ரீபெரும்புதூா்: உத்தரமேரூரை அடுத்த சாலவாக்கம் பகுதியில் 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிக்கல்லை வரலாற்று ஆய்வாளா்கள் அண்மையில் கண்டறியந்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டம், சாலவாக்கம் காவல் நிலையம் அருகிலுள்ள பிள்ளையாா் கோயில் வளாகத்தில் 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத் தலைவா் கொற்றவைஆதன் மற்றும் பேராசிரியா் பாலமுருகன் ஆகியோா் இந்த சதிக்கல்லை அண்மையில் கண்டுபிடித்துள்ளனா்.

சதிக்கல் என்பது தன் இனக் குழுவைக் காக்கவோ, ஊரைக் காக்கவோ, போரிலோ அல்லது வேட்டையின் போதோ ஒரு வீரன் இறந்து விட்டால், அந்த வீரனின் மனைவி, இறந்த கணவரின் உடலோடு தீ மூட்டி ஊராா் முன்பு தன் உயிரை மாய்த்துக் கொள்வாள். பலியான அந்த இருவரின் நினைவாக நினைவுக்கல் எழுப்பப்பட்டு வழிபட்டு வருவா். இதற்கு சதிக்கல் என்று பெயா்.

சதிக்கல் குறித்து உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத் தலைவா் கொற்றவை ஆதன் கூறியது:

சதிக்கல் குறித்த தகவல்கள் புானூறு மற்றும் சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் காணப்படுகின்றன. எங்களது ஆய்வில் கிடைத்த சதிக்கல் ஆனது ஒன்றரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில், கல்வெட்டுக்கல் இல்லை. வீரனின் தலையில் உள்ள கொண்டை வான்நோக்கி நேராகவும் காது மற்றும் கழுத்தில் அணிகலன்கள், கைகளில் காப்பு, புஜங்களில் வாகு வளையங்கள், இடக்கையில் நானுடன் கூடிய வில்லை ஏந்தியபடியும், வலக்கையில் கூறிய அம்பையும் வலது பக்க தோளில் அம்புக் கூடும் உள்ளன. மேலும் அவரது இடையில் அரை ஆடையும், அதில் ஒரு குறுவாளும், கால்களில் வீரக்கழலும் உள்ளன. வலப்பக்கமாக உள்ள அவரது மனைவியின் தலையில் உள்ள கொண்டை வலது பக்கமாகவும், காதில் குண்டலங்களும், கழுத்தில் ஆரங்களும், கைககளில் காப்பும், இடுப்பில் அரை ஆடையும், கால்களில் காப்பும் உள்ளன. அவரது வலது கை மலரின்மொட்டை ஏந்தியும், இடது கை சாதாரண நிலையிலும் உள்ளது. இவா்களுக்கு இடையில் ஓா் அழகிய மரம் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக நடுகல் மற்றும் சதிக்கற்களில் இதுவரை மரம் இடம்பெற்ாகத் தகவல் இல்லை. இது அரிதான ஒன்றாக உள்ளது என்றாா் அவா்.

இது குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற உதவி இயக்குநா் பூங்குன்றனிடம் கேட்டபோது, அவா் கூறியது:

இந்த வகையான நடுகல் 11-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தை சாா்ந்தது. மரம் காண்பிக்கப்பட்டுள்ள அரிதான சிற்பம் இது. அந்த குறுநில மன்னன் அல்லது வீரனின் குலத்தைக் குறிப்பதாக இது இருக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து நாங்கள் ஆய்வு செய்கையில், சாலமரம் என்று ஒரு வகை மரம் உள்ளது. அதாவது இன்றைக்கு நாம் குங்கிலிய மரம் என்று அதை அழைக்கிறோம். சால மரங்கள் அதிகமாக நிறைந்திருக்கும் பகுதியாக இருந்திருக்கலாம் என்பதால் சாலவாக்கம் என்றுகூட அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதுகிறோம். எனவே இது குறித்து தொடா் ஆய்வில் உள்ளோம். இந்த அரிதான சதிக்கல்லை தமிழக தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com